Categories
தேசிய செய்திகள்

பிரசாந்த் கிஷோரை காங்கிரஸில் இணைக்கலாமா?…. சோனியா காந்தியின் முடிவு என்ன?…..!!!!!

பாராளுமன்றம் தேர்தல் மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத அளவவிற்கு தோல்வியை தழுவி வருகிறது. இதன் காரணமாக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து சோனியா, ராகுலை விலகி இருக்கச் சொல்லி குலாம்நபி ஆசாத் தலைமையில் 23 காங்கிரஸ் முக்கியமான தலைவர்கள் போர்க் கொடி உயர்த்தினார்கள். காங்கிரசை முற்றிலுமாக மாற்றியமைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவது குறித்து கட்சியின் மூத்ததலைவர்கள் பங்கேற்கும் சிந்தனை கூட்டம் ராஜஸ்தானில் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. அவற்றில் பல்வேறு புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிகிறது. இதனிடையே காங்கிரஸ் உள்கட்சி தேர்தலையும் நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது. செப்டம்பர் மாதத்துக்குள் காங்கிரஸ் நிர்வாகிகளை முழுமையாக மாற்றியமைக்க சோனியா திட்டமிட்டு இருக்கிறார்.

இந்நிலையில் பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ்கட்சியில் சேருவதற்கு தீவிரமான முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். வரும் 2024-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற செய்ய அவர் புது வியூகங்களுடன் சோனியாவை அணுகியுள்ளார். சோனியாவுடன் அவர் 3 நாட்கள் தொடர் ஆலோசனை மேற்கொண்டார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பல குற்றங்களை விவரித்தார். அதிலும் குறிப்பாக 11 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த வேண்டியதின் அவசியத்தை சுட்டிக்காட்டினார். அதுமட்டுமல்லாமல் தனக்கு உரிய பதவி தந்து, அதிகாரம் தந்தால் அதிரடியாக பல்வேறு புது வியூகங்களை கொண்டு வரத் தயார் எனவும் கூறியுள்ளார்.

முன்னதாக மம்தா பானர்ஜி, மு.க ஸ்டாலின், ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி, உத்தவ் தாக்கரே, கே. சந்திரசேகர் ராவ் ஆகிய பல்வேறு முதல்-மந்திரிகளை கிஷோர் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசுவார் என்று தெரிகிறது. இதில் கிஷோர் இத்தலைவர்களுடன் சுமூகமான உறவுகளைப் பேணி வருகிறார். அத்துடன் வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக அல்லாத, கட்சிகளுக்கு இடையில் ஒரு பரந்த மற்றும் மறைமுகமான புரிதல் முக்கியமானதாக இருக்கும். இந்த நிலையில் பிரசாந்த்கிஷோர் சுட்டிக்காட்டிய மாற்றங்கள் என்னென்ன என்பது தொடர்பாக தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 85 பக்க விளக்கக்காட்சியின் அடிப்படையில் கிஷோர் சுட்டிக்காட்டி இருக்கிறார். அதாவது

# காங்கிரஸ் தலைமையில் காந்திகுடும்பம் அல்லாதவர் கட்சித்தலைவராக இருந்தால் உயர்ந்த தாக்கத்தினை ஏற்படுத்தும். ராகுல்காந்தியை மக்களவையில் கட்சியின் தலைவராகவும் முன்நிறுத்த வேண்டும்.

# மத்திய தலைமையின் 118 நபர்களில் 23 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். 66 செயற்குழு உறுப்பினர்களில் இருவர்மட்டுமே 45 வயதிற்கு உட்பட்டவர்கள்.

# கட்சி 2014 முதல் 24 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த ஒரு நாடு தழுவிய போராட்டத்தையோ அல்லது போராட்டத்தையோ நடத்தவில்லை. கடந்த 1990 இல் ராஜீவ் காந்தியால் மேற்கொள்ளப்பட்ட பாரத யாத்திரைதான் கடைசி வெகுஜன மக்கள் பிரச்சாரம் ஆகும்.

# தலைமை பதவி  சிக்கலை சரிசெய்வதற்கு விளக்கக் காட்சியில் 2 பரிந்துரைகள் அளிக்கபட்டது.  கட்சித்தலைவராக சோனியா காந்தியும், பாராளுமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியும், பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி வதேராவும், காந்தி குடும்பம் அல்லாத ஒருவர்  துணைத் தலைவராகவும் இருக்க வேண்டும்.

# மற்றொரு பரிந்துரையில் காந்திகுடும்பம் அல்லாதவர் காங்கிரஸ் தலைவராகவும், சோனியாவை கூட்டணி  தலைவராகவும், ராகுல் பாராளுமன்ற கட்சி  வாரியத் தலைவராகவும், பிரியங்கா பொதுச் செயலாளர் அல்லது ஒருங்கிணைப்பாளர் ஆகவும் இருக்க வேண்டும்.

# நாடாளுமன்றக்கட்சியின் தலைவராக ராகுல் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் மக்களின் குரலை திறம்பட பிரதிநிதித்துவப்படுத்தி மோடிக்கு எதிராக அவரை களமிறக்க முடியும் என அதில் கூறப்பட்டுள்ளது.

# கூட்டணி பிரச்சினையை சரிசெய்தல், கூட்டணியைப் பொறுத்தவரை காங்கிரஸ்தனித்துப் போட்டியிடுவது குறைவான தேர்தல் வெற்றியைப் பெறும். ஆனால் எதிர்க் காலத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். 70-75 % மக்களவைத் தொகுதிகளில் அந்த கட்சி போட்டியிடும் காங்கிரஸ் பிளஸ் மாதிரியை விரும்புகிறது.

# மராட்டித்தில் தேசியவாத காங்கிரஸ், ஆந்திராவில் ஒய்எஸ்ஆர்சிபி, மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், தமிழகத்தில் தி.மு.க.வுடன், ஜார்க்கண்டில் ஜே.எம்.எம் மூலோபாய பிராந்திய கூட்டணிகளை உருவாக்குவது.

# வாரிசு அரசியலை தடுப்பதற்கு ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே காங்கிரசில் பதவி.

# அனைத்து மட்டங்களிலும் தேர்தல் வாயிலாக அமைப்புகளை மறு சீரமைத்தல்.

#  15,000 அடிமட்டத் தலைவர்களைக் கண்டறிந்து இந்தியா முழுதும் 1 கோடி காங்கிரஸ் தொண்டர்களை களப் பணியில் ஈடுபடசெய்தல்.

# 200+ ஒத்த எண்ணம் கொண்ட  சிவில் சமூகஉறுப்பினர்களைக் கொண்ட கூட்டமைப்பை உருவாக்குவதன் வாயிலாக அவர்களை ஒருங்கிணைத்தல், கருத்து வேறுபாடுகளை  களைந்து இணைந்து செயல்படுதலை உறுதிசெய்ய வேண்டும்.

# இவை பிரஷாந்த் கிஷோர் அளித்த வியூக அறிக்கையில் விளக்கப்பட்டு உள்ளது.

# இந்த வியூகங்களை ஆராய 3 நபர்கள் கொண்ட குழுவை சோனியா காந்தி அமைத்துள்ளார். இத்திட்டங்கள் உண்மையில் காங்கிரசிற்கு பயன் உள்ளதா, பிரசாந்த்கிஷோரை காங்கிரஸில் இணைக்கலாமா என்பது தொடர்பாக அவர்கள் ஒரு வாரத்திற்குள் அளிக்கும் அறிக்கையை வைத்து சோனியாகாந்தி முடிவெடுப்பார்.

Categories

Tech |