Categories
தேசிய செய்திகள்

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த…. யுஜிசி அதிரடி உத்தரவு….!!!!

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த பயிற்சி வகுப்புகளை நடத்துமாறு தமிழகத்தில் உள்ள நான்கு பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது. அதன்படி சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக் கழகங்களுக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மத்திய அரசின் இந்த புதிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள நான்கு பல்கலைக்கழகங்களுக்கு புதிய கல்விக் கொள்கை அமல்படுத்த யுஜிசி உத்தரவிட்டுள்ளது. கடும் எதிர்ப்பு உள்ள நிலையில் பல்கலைக்கழகங்கள் இதை அமல்படுத்துமா என்பது விரைவில் தெரியவரும்.

Categories

Tech |