உலக பூமி தினத்தை கொண்டாடும் அடிப்படையில் கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுளை வெளியிட்டு இருக்கிறது. கடந்த 1970ஆம் வருடம் முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22ஆம் தேதி சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், பூமி மாசுபடுவதை குறைக்கும் விதமாகவும் ‘பூமி தினம்” கொண்டாடப்பட்டு வருகிறது. அதேநேரம் உலகம் முழுதும் மிக முக்கியமான நாட்களை கூகுள் நிறுவனம் தன் சிறப்பான டூடுளை வெளியிட்டு கொண்டாடுவது மிகவும் பிரபலமான ஒன்று ஆகும். இன்று உலக பூமி தினத்தையொட்டி கூகுள் நிறுவனம் அதன் ஹேம் பேஜில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் அடிப்படையில் டைம் லேப்ஸ் புகைப்படங்களை அனிமேஷனாக தொகுத்து டூடுளாக வெளியிட்டு உள்ளது. இது காலப் போக்கில் அழிந்துவரும் பவளப்பாறைகள், பனிப்பாறைகள் மற்றும் பசுமையான இடங்கள் உட்பட கிரகத்தின் பல்வேறு பகுதிகளை படங்களாக காட்டுகிறது.
காலப் போக்கில் வெப்பமான வெப்பநிலை வானிலை வடிவங்களை மாற்றுகிறது மற்றும் இயற்கையின் வழக்கமான சமநிலையை சீர்குலைக்கிறது. இது மனிதர்களுக்கும் பூமியிலுள்ள மற்ற அனைத்து விதமான உயிரினங்களுக்கும் பல்வேறு ஆபத்துக்களை ஏற்படுத்துகிறது. பூமியில் நிலவும் காலநிலை மாற்றத்திற்கான முக்கியமான காரணம் கிரீன்ஹவுஸ் வாயு வெளியேற்றம் என கூகுள் விளக்கம் அளித்துள்ளது.