உக்ரைன் நாட்டில் போர் தொடுத்துக் கொண்டிருக்கும் அதிபர் விளாடிமிர் புடினுக்கு ஆயுத உதவி செய்தால் சீனா மீது தடை விதிப்போம் என்று அமெரிக்க தூதர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத் துறையின் இணை அமைச்சரான வெண்டி ஷெர்மன், ரஷ்யாவின் வதந்திகளை பெரிதாக்கி கொண்டிருக்கும் சீனா, உக்ரைன் நாட்டில் நடக்கும் நிலையை முடிவுக்கு கொண்டுவர உதவவில்லை என்று கூறியிருக்கிறார். மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது, தடை அறிவிப்பது, ஏற்றுமதியில் கட்டுப்பாடு ஆகியவற்றிலிருந்து என்ன நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று அவர்கள் தெரிந்திருப்பார்கள்.
ரஷ்யாவிற்கு ஆயுத உதவி செய்தால் என்ன நடக்கும்? என்பது இதன் மூலமாக சீனாவிற்கு உணர்ந்திருக்கும். ரஷ்யாவின் ஆயுத தொழில்துறையில் உலக அளவில் தடை விதிக்கப்பட்டது எந்த வகையில் பாதிப்பை உண்டாக்கும் என்பதை கருத்தில் வைத்து பாரம்பரியமாக ரஷ்யாவின் ஆயுதங்களை நம்பிக்கொண்டிருக்கும் இந்தியா இதிலிருந்து விடுபடுவதற்கு உதவி புரிவோம்.
நாங்கள் விதிக்கும் பொருளாதார தடைகள், ரஷ்யாவின் ராணுவ தொழில்துறை வளாகத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டது. அதிலிருந்து விரைவாக மீள முடியாது என்று கூறியிருக்கிறார்.