ஹைதராபாத்தில் போக்குவரத்து காவல்துறையினர் கார் பூலிங் எனப்படும் ஒரே காரில் பலரும் பயணம் செய்வதை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.
டெல்லி உள்ளிட்ட பெரு நகரங்களில் வாகன புகை மற்றும் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ளிட்டவை தலையாய பிரச்சினையாக உள்ளது. கார் வைத்துக்கொண்டு தனிநபராக பயணம் செய்பவர்களையும், கார் பயணம் செய்ய விரும்புபவர்களையும் ஒருங்கிணைக்கும் விதமாக கார் பூலிங் முறை நடைமுறைக்கு வந்துள்ளது.
இதனால் போக்குவரத்து நெரிசலும் காற்று மாசுபாடு ஒருசேரக் குறையவும் வாய்ப்புள்ளது. மேலும் இதன்மூலம் வருமானத்தில் கார்வைத்திருப்பவர்கள் பெட்ரோல் சுமையை குறைக்க முடியும். இந்நிலையில் ஹைதராபாத்தில் கார் பூலிங் குவிப்பு தொடர்பாக போக்குவரத்து காவல்துறையினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான ஊழியர்கள் பங்கேற்றனர்.