உத்தரபிரதேசம் மாநிலம் ஆக்ராவில் 60 வயதான மூதாட்டிக்கும் 22 வயது இளைஞனுக்கும் ஏற்பட்ட காதல் தொடர்பாக மூதாட்டியின் கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
ஆக்ரா மாவட்டத்தில் உள்ள பிரகாஷ் நகர் காவல்நிலையத்திற்கு வினோதமான அதிர்ச்சி அளிக்கக்கூடிய புகார் ஒன்று வந்தது. அதாவது 7 குழந்தைகளுக்கு தாயான 60 வயது மதிக்கத்தக்க எனது மனைவியும் அதே பகுதியை சேர்ந்த 22 வயதான இளைஞனும் காதலித்து வருகிறார்கள். இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் 60 வயது மூதாட்டியின் கணவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சி அடைந்த போலீசார் மூதாட்டி, இளைஞன் மற்றும் அவர்களது குடும்பத்தினரை விசாரணைக்காக அழைத்தனர். ‘இந்த திருமண முடிவு தவறானது. இருவரும் மனதை மாற்றிக்கொள்ள வேண்டும்’ என குடும்பத்தினர் மற்றும் போலீசார் அறிவுரை கூறினர்.
மேலும் இருவரும் மனதை மாற்றிக்கொள்ளமல் பிடிவாதம் பிடித்ததால் அந்த இளைஞன் மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக வழக்கு பதிவு செய்து காதல் ஜோடியை எச்சரித்து அனுப்பி உள்ளனர்.