Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கோவில் திருவிழாவில்… “நூதன வழிபாடு”…. பில்லி, சூனியம் நீங்க துடைப்பத்தால் அடி வாங்கிய பக்தர்கள்..!!

கெலமங்கலம் அருகில் திரவுபதியம்மன், தர்மராஜசாமி கோவிலில் தேர் திருவிழா நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகில் டீகொத்த பள்ளி கிராமத்தில் திரவுபதி அம்மன், தர்மராஜசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தேர் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் திரவுபதி அம்மனுக்கு அழகு சேவை, பச்சை கரகம், தீபராதனை, பல்லக்கு உற்சவம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மேலும் பில்லி, சூனியம் நீங்குவதற்கு முறம், துடைப்பத்தால் பூசாரியிடம் அடிவாங்கி பக்தர்கள் சாமியை தரிசனம் செய்துள்ளனர். இதையடுத்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து முக்கிய வீதிகளின் வழியாக சென்று திரும்ப தேர் நிலையை வந்தடைந்தது. இந்த தேர் திருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர்.

Categories

Tech |