இருசக்கர வாகன விபத்தில் மாணவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கொல்லங்கோடு அருகே ஊரம்பு பெட்டுக்காடு வீடு பகுதியில் ரெஜிசிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார். இவருக்கு திருமணமாகி விஜிலா என்ற மனைவியும், ஒரு மகளும், மகனும் இருக்கின்றனர். இவருடைய மகன் ஜினோ நாகர்கோவிலில் இருக்கும் ஒரு தொழில் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் கல்லூரிக்கு தினமும் பேருந்தில் அல்லது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில் ஜினோ கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த விஷ்ணுவுடன் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு சென்றுள்ளார்.
இவர்கள் நாகர்கோவில் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென இருசக்கர வாகனம் நிலைத்தடுமாறி 2 பேரும் கீழே விழுந்துள்ளனர். இந்த விபத்தில் ஜினாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக விஷ்ணு லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இவர்கள் 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஜினோ பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விஷ்ணுவின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.