Categories
சினிமா தமிழ் சினிமா

“கேஜிஎஃப் 2” படம் திரையிடலின் போது…. இளைஞர் மீது துப்பாக்கி சூடு…. பெரும் பரபரப்பு….!!!!

கேஜிஎஃப் 2 படத்தின் திரையிடலின் போது தியேட்டரில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது ஒரு இளைஞர் சுடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவின் ஹவேரி மாவட்டத்தில் சினிமாவில் ஆக்ஷன் காட்சிகளை நினைவுபடுத்தும் வகையில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதில் காயமடைந்த ஹவேரி முகலியைச் சேர்ந்த வசந்தகுமார் சிவபூர் (27) என்பவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வசந்த்குமார் வயிற்றில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில், ஆபத்தான கட்டத்தை தாண்டியதாகவும், சம்பவத்தில் குற்றவாளிகளைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டதாகவும் ஹவேரி எஸ்பி தெரிவித்தார்.

வசந்தகுமார் ஹவேரியில் உள்ள தியேட்டர் ஒன்றில் நண்பர்களுடன் படம் பார்த்துக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. முன் இருக்கையில் அமர்ந்திருந்தவர் மீது கால் தெரியாமல் பட்ட நிலையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், இருவருக்கும் இடையே சண்டை மூண்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் முன் இருக்கையில் இருந்தவர் வெளியில் சென்று கைத்துப்பாக்கியுடன் திரும்பி வசந்தகுமாரை நோக்கி மூன்று முறை துப்பாக்கியால் சுட்டார்.

துப்பாக்கி சத்தம் கேட்டதும் தியேட்டரில் இருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர். தகராறில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சந்தேக நபரும் தப்பிச் சென்றுள்ளார். வசந்தகுமாரை போலீசார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். துப்பாக்கிச் சண்டைகள் நிறைந்த கேஜிஎப் 2 திரைப்படத்திற்கிடையே உண்மையில் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |