Categories
உலக செய்திகள்

உக்ரைன் நகரத்தில் நடந்த படுகொலைகள்…. அதிர வைக்கும் புகைப்படங்கள்…!!!

உக்ரைன் நாட்டிலிருந்து மரியுபோல் நகர் விடுவிக்கப்பட்டது என்று விளாடிமிர் புடின் கூறியிருக்கும் நிலையில், ரஷ்யப்படைகளின் கொடூரங்களை காண்பிக்கும் செயற்கைக்கோள் படங்கள் வெளிவந்திருக்கிறது.

உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகர், ரஷ்யப்படைகளால் கைப்பற்றப்பட்டு கடும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது. சுமார் 2,000 வீரர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் மட்டும் தற்போது அந்நகரத்தில் மாட்டிக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் ரஷ்யப்படைகள் மரியுபோல் நகரத்தில் செய்த படுகொலைகள், கொடூரங்களை காண்பிக்கும் வகையிலான செயற்கைக்கோள் புகைப்படங்களை ஒரு தனியார் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

சுமார் நான்கு லட்சம் மக்கள் வாழ்ந்துவந்த மரியுபோல் நகரில் பத்தாயிரம் மக்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் Azovstal என்ற இரும்பு தொழிற்சாலையில் மாட்டிக்கொண்ட ராணுவ வீரர்கள், மக்களின் மீது தாக்குதல் மேற்கொள்ள வேண்டாம் என்று விளாடிமிர் புடின் உத்தரவிட்டிருக்கிறார்.

மேலும், மரியுபோல் நகரிலிருந்து மக்கள் யாரும் வெளியே மற்றும் உள்ளே செல்ல முடியாத வகையில் முற்றிலுமாக அடைத்துவிட உத்தரவிடப்பட்டிருக்கிறது. மீதமிருக்கும் ராணுவத்தினர் ரஷ்ய படைகளிடம் சரணடைய மறுத்துவிட்டனர். எனவே அவர்களை வெளியேற விடாமல் கொல்வதை புடின் நோக்கமாக வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

Categories

Tech |