உக்ரைன் தலைநகர் கீவில் அடுத்தமாதம் பிரித்தானியா தூதரகம் மீண்டுமாக திறக்கப்படும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். அதாவது 2 நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ள போரிஸ் ஜான்சன், டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு அறிவித்தார். உக்ரைன் நாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் படைகளால் நிகழ்த்தப்படும் காட்டுமிராண்டித்தனத்தை போரிஸ் ஜான்சன் கண்டித்தார். அதுமட்டுமல்லாமல் உக்ரைனுக்கு பிரித்தானியா கூடுதலாக பீரங்கிகளை அனுப்பும் என்று தெரிவித்தார். கொரோனா காலக்கட்டத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதற்காக போலீசால் போரிஸ் ஜான்சனுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அப்போது கொரோனா நேரத்தில் விதிகளை மீறி பார்ட்டி நடத்தியது தொடர்பாக தனக்கு தெரிந்தே என நாடாளுமன்றத்தில் போரிஸ் ஜான்சன் பொய் கூறினாரா என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டெல்லி செய்தியாளர் சந்திப்பில் கொரோனா விதிமீறல் பிரச்சனையை குறிப்பிட்டு அவரது எதிர்காலம் தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த போரிஸ், அதற்காக பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் எண்ணம் தனக்கு இல்லை என தெளிவுபடுத்தினார். அதுமட்டுமல்லாமல் எதிர்வரும் அக்டோபர் மாதத்திலும் அவர் தான் பிரித்தனாியா பிரதமராக இருப்பார் என உறுதியாகக் தெரிவித்தார்.