Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சினை” வாலிபரின் விபரீத முடிவு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

குடும்ப பிரச்சினையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர்  மாவட்டத்தில் உள்ள முகமதுபுரம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரவீன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பிரவீனுக்கும்  அவரது மனைவி துர்காவுக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த பிரவீன் நேற்று வீட்டில்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பிரவீனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |