பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நடுக்காவேரி பாசார் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணவேணிக்கு கடந்த சில நாட்களாக தீராத வயிற்றுவலி இருந்து வந்துள்ளது. இதனையடுத்து நேற்று மீண்டும் வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கிருஷ்ணவேணி வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார்.
இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த கிருஷ்ணவேணியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கிருஷ்ணவேணி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.