Categories
மாநில செய்திகள்

நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்த வழக்கு…. விசாரணையை ஒத்திவைத்த சுப்ரீம் கோர்ட்….!!!!

தேனி மாவட்டம் மேற்கு தொடா்ச்சி மலைப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு எடுத்த முடிவுக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் தமிழக அரசு “மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு தான் முக்கியம், தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்கக் கூடாது” என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த நிலையில் நேற்று மீண்டும் இந்த மனு விசாரணைக்கு வந்த போது வழக்கில் ஆஜராக வேண்டிய சொலிசிட்டர் ஜெனரல் வேறு ஒரு நீதிமன்றத்தில் வாதிட்டு வருவதால் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பார்ட்டி இந்த விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் மூன்று வாரங்களுக்கு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.

Categories

Tech |