Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வட்டம் போட்ட காகங்கள்…. அரிய வகை ஆந்தையை மீட்ட இளைஞர்கள்…. குவியும் பாராட்டு….!!!

அரியவகை ஆந்தை ஒன்று பிடிபட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே உள்ள குடமுருட்டி கிராமத்தில் 2 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். அப்போது மரத்திலிருந்த ஒரு ஆந்தையை பல காகங்கள் சுற்றிக் கொண்டிருந்தது. இதைப்பார்த்த அந்த 2 வாலிபர்களும் அங்கிருந்த காகங்களை விரட்டினர்.

அதன்பின் ஆந்தையை பத்திரமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதைப் பார்த்த வனத்துறையினர் அது அரியவகை ஆந்தை என்றும் இந்தோனேஷியா நாட்டை சேர்ந்தது என்றும் கூறினார். மேலும் இந்த ஆண்டு இந்தோனேஷியாவில் இருந்து எப்படி இங்கு வந்தது என்று தெரியவில்லை எனவும் கூறினர்.

Categories

Tech |