துணை சுகாதார நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை சிறப்பாக நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் அருகே பாக்கம்பாடி கிராமத்தில் துணை சுகாதார நிலையம் அமைப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 32 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பூமி பூஜை சிறப்பாக நடைபெற்றது.
இதற்கு சின்னசேலம் ஒன்றிய தலைவர் வக்கீல் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். மேலும் இதில் ஊராட்சி மன்ற தலைவர் கலையரசி, ஒன்றியக்குழு உறுப்பினர் தனலட்சுமி பிரபாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் துரைசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.