4 வருடங்களாக கிடப்பில் போட்ட கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க டி.எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தடிக்காரன்கோணம் அருகே சி.எம்.எஸ் நகரில் இளையபெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லலிதா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். கடந்த 2018-ஆம் ஆண்டு லலிதா வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவர் அணிந்திருந்த தங்க நகைகள் மாயமாகி இருந்தது. இவர் இறந்த சிறிது நாளில் அவருடைய கணவர் இளையபெருமாள் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கீரிப்பாறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த கொலை வழக்கை விசாரிப்பதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
ஆனால் 4 வருடங்கள் ஆகியும் இதுவரை எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் கீரிப்பாறை காவல்நிலையத்தை சில நாட்களுக்கு முன்பாக ஹரிகிரண் பிரசாத் ஆய்வு செய்தார். அப்போது லலிதா கொலை வழக்கு தொடர்பாக விசாரித்தார். இந்த வழக்கை மீண்டும் விசாரிக்குமாறு கீரிப்பாறை காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக ஹரிகிரண் பிரசாத் தடிக்காரண்கோணம் பகுதியில் சென்று விசாரணை நடத்தினார். மேலும் கிடப்பில் போடப்பட்ட கொலை வழக்கை டி.எஸ்.பி மீண்டும் விசாரணைக்கு எடுத்தது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.