மதுரையில் நேரு நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி சரவணன், சிவகுமார், லட்சுமணன் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். இந்த மூவரது உடலும் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கழிவு நீர் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக ஒப்பந்தம் பெற்றுள்ள தனியார் நிறுவனமான வி.ஆர்.ஜி நிறுவனத்தின் உரிமையாளர் விஜயானந்த் மற்றும் ஊழியர்களாக ரமேஷ், லோகநாதன் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவுசெய்துள்ளனர். உரிய உபகரணங்களின்றி வேலையில் ஈடுபடுத்தியது, கவனக்குறைவாகச் செயல்பட்டது உள்ளிட்ட 3 பிரிவுகளின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த 3 பெரும் தற்போது தலைமறைவாக உள்ளனர். இந்த 3 போரையும் தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது போன்ற மரணங்கள் தமிழகத்தில் முடிவில்லா தொடர் கதை. தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதுமே இந்த கொடுமை தான். டிஜிட்டல், தொழில்நுட்பம், ராக்கெட், ஏன் நிலா வரை கூட இந்தியா சென்றாலும், இந்த கழிவுநீர் தொட்டிக்குள் செல்ல மட்டும் இன்னும் கண்டுபிடிப்புகள் உருவாகவில்லை.