மேலும் மக்கள் போராட்டத்தால் இலங்கையில் அரசியல் நெருக்கடியும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய கேஸ் சிலிண்டர் விலை இருமடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 12.5 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டரின் விலை 2500 ரூபாய் உயர்த்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன் 12.5 கிலோ எடை கொண்ட ஒரு சிலிண்டரின் விலை 2675 ரூபாயாக இருந்தது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் 12.5 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை 5,175 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என்று லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.ஒரு சிலிண்டரின் விலை 2500 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
Categories