மோட்டார் சைக்கிள்களை திருடி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு பகுதியில் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர் . இதுகுறித்து அப்பகுதி மக்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஒரத்தநாடு பைபாஸ் சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்த வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்துள்ளனர்.
அந்த விசாரணையில் அவர் பட்டுக்கோட்டையை சேர்ந்த கலைச்செல்வன் என்பதும், ஒரத்தநாடு பகுதியில் மோட்டார் சைக்கிள்களை திருடி சென்றதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் கலைச்செல்வனை கைது செய்துள்ளனர். மேலும் இதுக்குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 7 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.