கல்லூரி விடுதியில் மாணவிகள் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஓரத்தநாடு பகுதியில் அரசு கலை அறிவியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் நூற்றுக்கணக்கான மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும் ஏராளமான மாணவிகள் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று கல்லூரி விடுதியில் இருந்த வனிதா, ஜனனி, முத்துலட்சுமி, சிவரஞ்சனி, கிருஷ்ணவேணி, இளையராணி, தீட்சண்யா உள்ளிட்ட 9 மாணவிகளுக்கு திடீரென வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த விடுதி அதிகாரிகள் மாணவிகளை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.