தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்து ஒரு வருடம் நிறைவடைய போகிறது. இந்த ஒரு வருடத்தில் பல்வேறு நலத் திட்டங்களை அரசு செயல்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பிரதிநிதிகளுக்கு கூட்டங்களில் கலந்துகொள்ளும் நாட்களில் அமர்வு படி தொகை பத்து மடங்காக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கு அமர்வு படித்தொகை ஐந்து மடங்காக உயர்த்தி வழங்கப்படும். அமர்வு தொகை உயர்த்தி வழங்குவதால், மாநிலத்தில் உள்ள 12,525 கிராம ஊராட்சி தலைவர்கள், 99,327 கிராம ஊராட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட 1.19 லட்சம் பேர் பயனடைவர் என்று தெரிவித்துள்ளார்.