Categories
ஆன்மிகம் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…..பாராட்டுகள் பெறுவீர்கள்….நிம்மதி அதிகரிக்கும் …!

தனுசு ராசி அன்பர்களே…!! இன்று நீங்கள்  உங்களுடைய  செயல்களினால் நண்பரிடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். தொழில் அதிக உழைப்பினால் சாதனை புரிவீர்கள். உபரி பண வரவு சேமிப்பாகும். குடும்பத்தில் வாழும் பெண்களின் மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். இன்று தெய்வ வழிபாடு சிறக்கும்.

இன்று சக ஊழியர்கள் மற்றும் மேல் அதிகாரியிடம் இருந்து வந்த மனக்கசப்பு மாறும். குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு கூடும். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த மனஸ்தாபங்கள் மறைந்து ஒற்றுமை ஓங்கும். பிள்ளைகளிடம் பாசம் அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

தொழிலில் இலாபம் ஏற்படும். பிள்ளைகள் தகப்பனாருடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வெளித் தொடர்புகளில் எச்சரிக்கையாக இருங்கள். அது மட்டுமில்லாமல் சூரியபகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். நினைத்த காரியங்களுக்கு செல்லும்போது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து சென்றால் எல்லாம் நல்ல படியாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : கரும் பச்சை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |