இன்றைய பஞ்சாங்கம்
26-01-2020, தை 12, ஞாயிற்றுக்கிழமை
துதியை திதி பின்இரவு 06.16 வரை பின்பு வளர்பிறை திரிதியை.
நாள் முழுவதும் அவிட்டம் நட்சத்திரம்.
நாள் முழுவதும் மரணயோகம்.
நேத்திரம் – 0. ஜீவன் – 0. சந்திர தரிசனம்.
வாஸ்து நாள்.
மனை பூஜை செய்ய உகந்த நேரம் 10.46 மணி முதல் 11.22 மணி வரை.
இராகு காலம் – மாலை 04.30 – 06.00
எம கண்டம் – பகல் 12.00 – 01.30
குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30
சுப ஹோரைகள்
காலை 7.00 – 9.00
பகல் 11.00 – 12.00
மதியம் 02.00 – 04.00
மாலை 06.00 – 07.00
இரவு 09.00 – 11.00
மேஷம்:
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை நல்ல முறையில் இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுக்கோப்புடன் காணப்படும். பிள்ளைகள் படிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். மனைவிவழி சொந்தங்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான பிரச்சினைகள் குறையும். புதிய பொருள் வீடு வந்து சேரும்.
ரிஷபம்:
இன்று இல்லத்தில் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி அதிகமானாலும் தேவையற்ற செலவுகளும் அதிகமாகும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் சிறு தொகையினை செலவு செய்ய நேரிடும். தொழிலில் வேலை ஆட்கள் உங்களின் குணமறிந்து செயல்படுவார்கள். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு இன்று கிடைக்கும். கடன்கள் குறைந்து காணப்படும்.
மிதுனம்:
இன்று உங்கள் குடும்பத்தில் தேவையற்ற டென்ஷன் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எந்த செயலிலும் நிம்மதி இல்லாத நிலை இருக்கும். கைக்கு வர வேண்டிய தொகை கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். இன்று உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் நிலைப்பதால், எந்த செயலை செய்தாலும் நிதானத்துடனும் பொறுமையுடனும் செய்வது நல்லது.
கடகம்:
இன்று வீட்டில் தேவையற்ற செலவுகள் ஏற்படும். வாகனங்களில் பயணிக்கும்போது மிகவும் கவனமாக இருப்பது நல்லது. பெரியவர்களின் மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். சிக்கனத்தைக் கடைபிடிப்பது மூலம் கடன் பிரச்சனை ஓரளவு குறையும். பெண்கள் தங்களின் பொறுப்பினை உணர்ந்து செயல்படுவார்கள்.
சிம்மம்:
இன்று உடலில் இருந்த ஆரோக்கியத் தொல்லைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிறைந்த சூழல் உருவாகும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நல்ல பலன் உண்டாக்கும். பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். பெண்களால் நல்ல பலன் கிடைக்கும்.
கன்னி:
இன்று வியாபாரம் தொடர்பாக சிறிய சிறிய பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. வெளியூர் பயணங்களின் போது கவனமாக இருக்கவும். வீட்டின் தேவையை பூர்த்தி செய்வதற்காக பணவரவு இருக்கும். புதிய பொருட்களின் சேர்க்கை இருக்கும். நண்பர்கள் வழியில் நன்மை நடக்கும். எதிலும் பொறுமையுடன் இருப்பது மிகவும் நல்லது.
துலாம்:
இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளின் செயல்கள் உங்களுக்கு மனமகிழ்ச்சியை தரும். அதிக விலையுள்ள பொருட்களை வாங்குவதில் நாட்டம் செல்லும். நண்பர்களின் கருத்தால் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வராமல் தாமதப்பட்டு இருந்த கடன்கள் இன்று வசூலாகும்.
விருச்சிகம்:
இன்று இல்லத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சியான விஷயங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. பிள்ளைகள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். திருமணம் போன்ற சுபமுயற்சிகளில் நல்லதொரு முன்னேற்றம் இருக்கும். பணவரவு இன்று தாராளமாக இருக்கும். சொத்துக்களை வாங்க விற்க நல்ல நாள் ஆகும். இன்று சேமிப்புகள் உயர வாய்ப்புள்ளது.
தனுசு:
இன்று பொருளாதார பிரச்சனையால் குடும்பத்தில் பணப் பற்றாக்குறை ஏற்படும். உடல்நிலையில் பாதிப்புகள் உண்டாகும் வாய்ப்பு உள்ளது. கணவன்-மனைவி இடையே சிறிய மனக் கசப்புகள் ஏற்படலாம். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பயணம் மூலம் வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும்.
மகரம்:
இன்று சுப செலவுகள் இருக்கும். உங்களின் முயற்சிகளுக்கு உடன்பிறந்தவர்களின் உதவி கிடைக்கும். பிள்ளைகள் தாங்கள் விரும்பியதை வாங்கி மகிழ்ச்சி அடைவார்கள். எதிர்பார்த்திருந்த பண உதவிகள் வந்து சேரும். தொழிலில் வாங்கல் கொடுக்கல் நிறைவானதாக இருக்கும்.
கும்பம்:
இன்று இல்லத்தில் அமைதியும் ஒற்றுமையும் உருவாகும். சுப முயற்சிகளில் இருந்த தடைகள் அகலும். தொழிலில் சிறிய மாற்றங்கள் செய்வதன் மூலம் எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தை அடைய முடியும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பூர்வீக சொத்துக்களில் நல்ல பலன் கிடைக்கும்.
மீனம்:
இன்று குடும்பத்தில் நல்ல தகவல்கள் கிடைக்கப் பெற்று மனம் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். பெற்றோருடன் இருந்து வந்த வேற்றுமை அகலும் தொழில் ரீதியான பேச்சுவார்த்தையில் நல்லதொரு முன்னேற்றம் காணப்படும். பெரியவர்களின் நட்பு கிடைக்கப்பெறுவீர்கள். தர்ம காரியங்களில் ஈடுபட்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள்.