கொரோனா தடுப்பூசியின் பயன்பாடு குறித்து அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகத்தின் மருத்துவ பேராசிரியர் அமிதா குப்தா பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, பல்வேறு நாடுகளில் மக்களுக்கு தடுப்பூசி கிடைப்பதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. உலகம் முழுவதும் 56 நாடுகளில் 10 சதவிகித மக்களுக்கு கூட இன்னும் தடுப்பூசி செலுத்தப்படவில்லை.
தடுப்பூசி செலுத்தாத வரை கொரோனாவிடம் இருந்து தப்பிப்பது என்பது கடினமான ஒன்று. இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசி மொத்தம் 2 சதவீதம் பேருக்கு தான் செலுத்தப்பட்டுள்ளது.” இவ்வாறு அவர் கூறியுள்ளார். சீனாவின் ஷாங்காய் நகரில் வேகமாக பரவி வரும் வைரஸ் தொற்றால் ஒரே நாளில் 11 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.