சில வருடங்களுக்கு முன்பு வரை தலைவாழையில் சாப்பாடு, கடைசியில் வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் இருந்தது. உணவே மருந்து என்ற பேச்சுக்கு இணங்க செரிமானத்திற்காக இப்பழக்கம் ஆண்டாண்டு காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. ஆனால் இப்போது அப்பழக்கம் முற்றிலும் அடியோடு மாறி இருக்கிறது. இந்த நிலையில் சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய பெரியகுளம் எம்எல்ஏ சரவணன், வெற்றிலையை மருத்துவத்துறை பயன்படுத்தும் வகையில், வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
காட்டுமன்னார் கோவிலில் வெற்றிலை அதிகமாக உற்பத்தி செய்யப்படுவதால் லால்பேட்டையில் ஆராய்ச்சி மையத்துடன்கூடிய தோட்டக்கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என்று வி.சி.க எம்.எல்.ஏ சிந்தனைச் செல்வன் வலியுறுத்தினார். இது குறித்து வேளாண்மை துறை அமைச்சரான பன்னீர்செல்வம் பேசியதாவது “வேளாண் கல்லூரிகள் வாயிலாக வெற்றிலைஆராய்ச்சியானது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துஉள்ளார். சென்ற காலங்களில் உணவு சாப்பிட்டவுடன் வெற்றிலை போடும் பழக்கம் இருந்ததாகவும், ஆனால் தற்போது இளைஞர்கள் ஸ்வீட் பீடாவுக்கு மாறிவிட்டதாகவும் தெரிவித்தார்.