சென்னை – அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஆய்வு நடத்திய அமைச்சர் செந்தில்பாலாஜி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மின் உற்பத்திக்காக 2 மாதங்களின் நிலக்கரி தேவைக்காக மட்டும் டெண்டர் விடப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரமும் நிலக்கரியும் வந்து சேராததே பிரச்னைக்கு காரணம் என்று செந்தில் பாலாஜி விளக்கமளித்தார். மின்வெட்டு குறித்த புகார்களை 94987 94987 என்ற 24 மணி நேர சேவை எண்ணில் தெரிவித்தால் உடனடியாகதீர்த்து வைக்கப்படும் என்றும், தற்போது இந்த எண்ணில் வரும் புகார்கள் 99 சதவிகிதம் நிறைவேற்றப்பட்டு வருவதாகவும் கூறினார்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்னும் ஓரிரு நாட்களில் மின்தடை இருக்காது என்ற பேச்சுக்கே இடம் இருக்காது என உறுதியளித்துள்ளார். நேற்று மின் தடை குறித்து பேரவையில், மாலைக்குள் சரி செய்யப்படும் என தெரிவித்த அவர் இன்று ஓரிரு நாட்களில் மின்வெட்டு அறவே இருக்காது என கூறியுள்ளார். மேலும் இரண்டு மாதங்களுக்கு நிலக்கரி இறக்குமதி செய்ய இரண்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.