நாற்றிலா நடவு மூலம் அதிக மகசூல் அளிக்கும் விதைகளை பொறியியல் பட்டதாரி ஒருவர் வழங்கி வருகிறார்.
திருச்சி மாவட்டம் சிறுகமணியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி வெங்கடேசன் என்பவர் நாற்று இல்லா நடவு எனும் நடைமுறையை அறிமுக படுத்தியுள்ளார்
அதாவது கேப்சூல் எனப்படும் மாத்திரை உறைகளில் விதைகளை அடைக்கும் இவர் அவற்றை வீசி எறிவதன் மூலமோ அல்லது மண்ணில் புதைப்பதன் மூலமோ நடவு செய்யலாம் என்கிறார்.
மாத்திரை உறைகளுக்கு பதிலாக பொட்டலங்களில் விதைகளை வைத்து அன்பளிப்பாக கொடுக்கும் வகையில் பரிசு பொட்டலங்களாகவும் தயாரித்து விற்கிறார் இவற்றை திருமண பரிசாகவும் கொடுப்பதற்கு பலரும் வாங்கி செல்கின்றனர்.
மரம் ,செடி மட்டுமல்லாது நெல் போன்ற பயிர் வகைகளும் நாற்றிலா நடவு மூலம் அதிக மகசூல் அளித்து வருவதாக வெங்கடேசன் கூறுகிறார் எனவே, விதை பொட்டலங்களை வாங்க சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.
மாத்திரை உறை விதைகள், விதை பொட்டலங்கள் உள்ளிட்டவைகளை தயாரிக்க அரசு மானியம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.