தமிழ் திரையுலகம் பல வில்லன் நடிகர்களை சந்தித்துள்ளது. இதில் வித்தியாசம்ஆன ஒரு வில்லன் நடிகராகபிரகாஷ்ராஜ் இருந்து வருகிறார். இவர் போக்கிரி, பேரரசு, வீராப்பு, பீமா, சிவகாசி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் ட்வீட் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “டீ வித்தாருன்னு சொன்னா நம்பறவங்க, ஏன் நாட்டை விற்கிறாருன்னு சொன்னா நம்ப மாட்றாங்க” என இந்திய பிரதமர் மோடி தொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்வீட் வாயிலாக இந்த விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
இதற்கு முன்பாக முற்போக்காளர்கள், பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள், விவசாயிகளின் போராட்டம் முதல் நாட்டை உலுக்கிய பல்வேறு விவகாரங்களிலும் தொடர்ந்து பிரதமர் மோடியை, பிரகாஷ் ராஜ் விமர்சித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நடிகர் பிரகாஷ் ராஜின் இந்த ட்வீட் பதிவு மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.