தோனி ஆட்டத்தை பார்த்து நடிகர் சூரி துள்ளிக்குதிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஐபிஎல் தொடரின் 33வது லீக் ஆட்டத்தில் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் தோனியின் அதிரடியால் சிஎஸ்கே அணி த்ரில் வெற்றியை பெற்றது. டாஸ் வென்ற சிஎஸ்கே பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங்கை தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 156 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தபோட்டியில் தோனியின் அதிரடி ஆட்டத்தால் சிஎஸ்கே அணி தனது 2வது வெற்றியை பதிவு செய்தது.
https://www.instagram.com/p/Ccn8jEAgxCo/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again
கடைசி ஓவரில் 17 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. இப்போட்டியில் உனாட்கட் கடைசி ஓவரை வீசினார். முதல் பந்தில் பிரிட்டோரியஸ் ஆட்டமிழக்க, 2வது பந்தில் பிராவோ ஒரு ரன் ஓடினார்.இதனால் 4 பந்துக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. யாரும் எதிர்பாராத வகையில் தோனி ஒரு சிக்ஸர், 2 பவுண்டரி, மற்றும் 2 ரன்கள் என 16 ரன்களை குவித்து வெற்றிக்கனியை பெற்றுக் கொடுத்தார். செம த்ரில்லிங்கான இப்போட்டியை பிரபல நகைச்சுவை நடிகரான சூரியும் பார்த்து ரசித்திருக்கிறார்.
கடைசி ஓவரில் தோனியின் மிரட்டலான ஆட்டத்தையும் சிஎஸ்கே வெற்றி பெற்றதையும் பார்த்த சூரி தலதல என துள்ளிக் குதித்து ஆட்டம் போட்டிருக்கின்றார். சூரி என்ஜாய் பண்ணும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருவது மட்டுமல்லாமல் லைக்ஸ்களையும் குவித்து வருகிறது.