Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“மண்ணை காப்போம்”…. விழிப்புணர்வு பிரச்சாரம்…. ஏராளமான மாணவர்கள் பங்கேற்ப்பு!!

உலக பூமி தினத்தை முன்னிட்டு தனியார் கல்லூரி மாணவர்கள் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றுள்ளது.

நாமக்கல் மாவட்டம் உலக பூமி தினத்தை முன்னிட்டு ஜக்கிவாசுதேவின் மண் காப்போம்  இயக்கம் மற்றும் பரத்திவேலூரில் உள்ள தனியார் கல்லூரி தாவரவியல் மாணவர்கள் சார்பில் பரமத்தி வேலூரில் வைத்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர். இதனையடுத்து குப்பைகளை மறுசுழற்சி செய்யும் முறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.

மேலும் இந்த நிகழ்ச்சிக்கு தனியார் கல்வி நிறுவனங்களின் தலைவர் சோமசுந்தரம், கல்லூரி முதல்வர் தங்கராஜூ, பரமத்திவேலூர் துணை சூப்பிரண்டு அதிகாரி ராஜரணவீரன், அரிமா கண்ணன், சைலேந்திரபாபு ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனர் தில்லைகுமார், கல்லூரி பேராசிரியர்கள் , தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் உள்பட பல்வேறு மாணவர்களும் பங்கேற்றுள்ளனர்.

Categories

Tech |