போக்குவரத்து விதிகளை மீறிய மோட்டார் சைக்கிள்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் இருக்கும் கோட்டார், மணிமேடை, பால் பண்ணை, கலெக்டர் அலுவலக சந்திப்பு போன்ற பல இடங்களில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் கோட்டார் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக வாலிபருக்கு 700 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இதேப்போன்று மாவட்டத்தின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் போக்குவரத்து விதிகளை மீறி செயல்பட்ட குற்றத்திற்காக 310 மோட்டார் சைக்கிள்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் சில மோட்டார் சைக்கிள்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.