நடிகை வனிதா விஜயகுமார் தற்போது ஃபேஷன் டிசைனராக புது அவதாரம் எடுத்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாக்ஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி சண்டைக் கோழியாக வளம் வந்தவர் வனிதா விஜயகுமார். இந்நிகழ்ச்சிக்குப் பின் அடுத்தடுத்து நிகழ்ச்சிகளிலும், 10 திரைப்படங்களிலும் ஒப்பந்தமாகி இருக்கிறார். இதற்கிடையில் அவர் சொந்தமாக யூட்யூப் சேனல் மற்றும் ஃபேன்சி ஸ்டோர்களையும் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் வனிதா விஜயகுமார் தற்போது புது அவதாரமாக ஃபேஷன் டிசைனர் ஆக மாறியுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற ஃபேஷன் நிகழ்ச்சி ஒன்றில் தான் ஹேர் ஸ்டைல் மற்றும் மேக்கப் செய்த அழகிகளுடன் மேடையில் பயங்கரமாக நடை போட்டு உள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டு அதனுடன் நீண்ட நாள் ஆசை நிறைவேறி உள்ளதாக குறிப்பிட்டு இருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் வனிதா விஜயகுமாருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.