Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் XE வகை கொரோனா இல்லை”…. மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம்…!!!!!!

ஜனவரி 19 ஆம் தேதி பிரிட்டனில் முதன்முதலாக XE வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இது ஒமைக்ரான் வைரஸில் இருந்து உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் திரிபு என தெரிவிக்கப்பட்டது. இந்த புதிய வகை வைரஸ் ஒமைக்ரானை விட அதிகமாகப் பரவக் கூடியதாக இருக்கலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. XE என்பது ஒமைக்ரானிலிருந்து உருமாறிய வைரஸ்களான BA.1 மற்றும் BA.2 ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடமிருந்து உருமாறியுள்ளது. இந்த உருமாற்றம் அடைந்த XE வகை கொரோனா வைரஸ் இந்தியாவில் மும்பையை சேர்ந்த ஒருவருக்கு இருப்பது நேற்று கண்டறியப்பட்டது.

இந்நிலையில் சென்னை ஐஐடியில் 1,420 பேருக்கு கொரோனா  பரிசோதனை செய்ததில் மொத்தம் 55 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் தொற்று  பாதித்தவர்கள் ஐஐடி வளாகத்தில்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் தமிழகத்தில் இதுவரை XE வகை கொரோனா கண்டறியப் படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |