போச்சம்பள்ளி சார்பதிவாளர் அலுவலகத்தில் விவசாயி குடும்பத்துடன் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகில் பேரண்டப்பள்ளி சிப்காட் பகுதியில் வசித்து வருபவர் விவசாயியான பழனியப்பன்(55). இவருக்கு சொந்தமான இடத்தை வேறொரு நபர் பொய்யான ஆவணங்களை வைத்து பத்திரம் பதிவு செய்து தனியார் வங்கியில் வீட்டுக் கடன் வாங்கி உள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பழனியப்பன், அவருடைய தம்பி வரதராஜன் போச்சம்பள்ளி சார்பதிவாளர் அலுவலகத்தில் தனக்கு சொந்தமான இடத்தை பொய்யான ஆவணங்கள் மூலம் பதிவு செய்ததை ரத்து செய்ய வேண்டும்.
மேலும் தனது சொந்த நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என்று கோரி குடும்பத்துடன் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். இதற்கிடையில் இத்தகவலறிந்த போச்சம்பள்ளி காவல்துறையினர் விரைந்து வந்து இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கொடுத்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டுட்டு அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர்.