Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“வீட்டில் தனியாக இருந்த பெண்” வாலிபர்களின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பெண்ணிடம் கத்தியை காட்டி நகை மற்றும் பணம் பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள ரெங்கநல்லூர் கன்னிகாபுரம் பகுதியில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான மகாலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு  சித்ரா என்ற மனைவி மற்றும்  வினிவர்ஷா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் நேற்று  வினிவர்ஷா வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த 2 மர்ம நபர்கள் வினிவர்ஷாவிடம்   கத்தி காட்டி மிரட்டி லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 20 பவுன் தங்க நகை மற்றும் 50 ஆயிரம்  ரூபாய் பணத்தை திருடிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து வினிவர்ஷா தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த வினிவர்ஷாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து வீட்டிற்குள் நுழைந்து கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் நகையை கொள்ளை அடித்து  சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |