சட்டவிரோதமாக மணல் கடத்தி வந்த லாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மேலவஸ்தாசாவடி பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை காவல்துறையினர் நிறுத்தியுள்ளனர். இதனை பார்த்த லாரி ஓட்டுனர் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் லாரியில் சட்டவிரோதமாக மணல் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் மணல் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய லாரி ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.