Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

விபத்து வழக்கில்.… ரூ 14, 54,000 கொடுக்கல….. நீதிமன்றம் உத்தரவு…. அரசுப் பேருந்து ஜப்தி..!!

விபத்து வழக்கில் நஷ்ட ஈடு கொடுக்காத அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.

சேலம் மாவட்டம், ஆத்தூர் கெங்கவல்லி பகுதியில் வசித்து வந்தவர் கூலித் தொழிலாளியான அண்ணாதுரை(32). இவர் கடந்த 2016-ஆம் வருடம் திருச்சி வந்திருந்த நிலையில் அவர் திருச்சி – சேலம் நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டத்திற்கு சொந்தமான அரசு பேருந்து எதிர்பாராத விதமாக அண்ணாதுரை மீது மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அண்ணாதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நஷ்ட ஈடு கேட்டு திருச்சி சிறப்பு மாவட்ட கோர்ட்டில் அண்ணாதுரையின் மகன்கள் வழக்கு தொடர்ந்துள்ளார்கள். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நஷ்ட ஈடாக ரூ 14,54,000 த்தை அரசு போக்குவரத்து கழகம் வட்டியுடன் இழப்பீடாக கொடுக்க வேண்டும் என்று கடந்த 2019 ஆம் வருடம் செப்டம்பர் 19-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.

ஆனால் மேற்கண்ட உத்தரவின்பேரில் அரசு போக்குவரத்து கழகம் நஷ்ட ஈடு கொடுக்காத காரணத்தால் அதே கோர்ட்டில் நிறைவேற்ற மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த 31ஆம் தேதி அந்த அரசு பேருந்து ஜப்தி செய்ய கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதன்படி நேற்று திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நின்ற தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டத்திற்கு சொந்தமான பேருந்தை ஜப்தி செய்துள்ளனர். இதனால் அந்த பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |