Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான்: பயங்கரவாத தாக்குதல்…. கண்டனம் தெரிவித்த ஐ.நா…..!!!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் பயங்கரவாதிகள் தாக்குதலில் பல பேர் கொலை செய்யப்பட்டனர்.  மசார்-இ-ஷரீப்பிலுள்ள சே டோகன் மசூதிக்கு எதிரான தாக்குதல் மற்றும் இஸ்லாமிய அரசு உரிமை கோரும் குண்டூஸில் தனி தாக்குதல்களினால் பொதுமஐநா க்கள் மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளனர். இந்நிலையில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களுக்கு கண்டனத்தை தெரிவித்தனர். மேலும் அவர்கள் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும், இரங்கலையும் தெரிவித்தனர்.
இதையடுத்து பயங்கரவாதம் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு கடும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகிறது எனவும் இந்த கண்டிக்கத்தக்க பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் நிதி வழங்குபவர்கள் நீதியின் முன்நிறுத்த வேண்டியர்கள் எனவும் தெரிவித்தனர். அத்துடன் பயங்கரவாதிகளை ஒடுக்க பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களின் கீழ் அனைத்து அதிகாரிகளும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

Categories

Tech |