மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஒவ்வொரு மாதமும் விருப்பம் போல் பயணம் செய்யும் மாதாந்திர சலுகை பயண அட்டையானது 29 மையங்களில் 1ம் தேதி முதல் 22ஆம் தேதி வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களில் பணி புரிகின்ற அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் மாநகர போக்குவரத்து கழக பயணிகள் இந்த மாதத்திற்கான ரூ.1,000 மதிப்பிலான பயண அட்டை மற்றும் மாதாந்திர சலுகை பயண அட்டையை ஏப்ரல் 23,24 ஆம் தேதிகளில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 14ம் தேதி முதல் 17-ம் தேதி வரையிலான தொடர் விடுமுறை காரணமாக இரண்டு நாட்கள் நீட்டித்து வழங்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.