சீனா, தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரேசில் உட்பட பல்வேறு நாடுகள் ஜி-20 அமைப்பில் ரஷ்யா உறுப்பினராக நீடிப்பதற்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளன.
வாஷிங்டனில் ஜி20 நிதி அமைச்சர்களின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஜி20 தலைவர்களிடையே பிரச்சினைகள் வரும் என்று கூறப்பட்டிருக்கிறது. மேலும் வாஷிங்டனில் இந்த கூட்டம் நடந்தபோது ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சரான ஆண்டன் சிலுவானோவ், தன் உரையை தொடங்கியபோது ஜி7 மற்றும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவிற்கு எதிராக வாக்களித்த நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார்கள்.
இந்தியாவை தவிர்த்து பிரேசில், சீனா, தென் ஆப்பிரிக்கா, இந்தோனேசியா, சவுதி அரேபியாவின் நிதியமைச்சர்களில் சிலர் ரஷ்ய வெளியுறவு அமைச்சரின் உரையை புறக்கணிக்காமல் இருந்தனர். மேலும் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ளாமல் அமெரிக்கா புறக்கணிக்கும் பட்சத்தில் சீனாவின் கை மேலோங்கும், கூட்டத்தில் கலந்துகொண்டு ரஷ்யாவின் குற்றத்தை உணர செய்ய வேண்டும் என்று வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
உக்ரைனில் நடக்கும் போருக்கு பிறகு சர்வதேச சமூகத்திலிருந்து ரஷ்யாவை மேற்கத்திய நாடுகள் புறக்கணிக்கிறது. எனினும் ஜி-20 கூட்டமைப்பில் ரஷ்யாவினுடைய உறுப்புரிமை உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.