Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மக்கள் தொடர்பு திட்ட முகாம்…. ரூ 6,23,230 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய கலெக்டர்..!!

மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 84 பயனாளிகளுக்கு ரூ 6,23,230 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜெயச்சந்திரபானுரெட்டி வழங்கியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகில் புனுகன் தொட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார். இந்த முகாமில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பாக 84 பயனாளிகளுக்கு ரூ 6,23,330 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கியுள்ளார்.

மேலும் ஓசூர் உதவி கலெக்டர் தேன்மொழி, தனித்துணை கலெக்டர் பாக்கியலட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அமீர்பாஷா, மாவட்ட ஆதிதிராவிடர் அலுவலர் சாந்தி, ஒன்றிய குழு தலைவர் சசி வெங்கடசாமி, தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பூபதி, பாலாஜி, அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

அப்போது கலெக்டர் கூறியதாவது, முதலமைச்சர் தலைமையில் அரசு பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு வளர்ச்சி மேம்பாட்டிற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. குழந்தை திருமணம், பாலியல் தொந்தரவு, பாலியல் சீண்டல்கள், பெண் சிசுக்கொலை இவை அனைத்து பெண்களின் எதிர்காலத்தை பாதிக்கிறது. இதை தடுப்பதற்காக மாநில அளவிலான பயிற்சி பட்டறை முதன்முதலில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடங்கப்பட்டு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

மேலும் குழந்தை திருமணம் நடைபெறுவதை தடுப்பதற்கு 1098, 1091,181 என்ற எண் மூலம் தகவல் அளிக்கலாம். தற்போது அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் முதல், இரண்டாவது கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் செலுத்தி கொள்ளுங்கள் என்றார்.

கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும், மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும் என்றார். மேலும் ஓசூர் பகுதியில் பல்வேறு தொழிற்சாலைகளை கொண்டு வருவதற்கு  தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகின்றார் என்று தெரிவித்தார்.

Categories

Tech |