Categories
மாநில செய்திகள்

சிலிண்டர் வால்வை திறந்து வைத்து பெண் தற்கொலை மிரட்டல்… 8 மணி நேர போராட்டம்…. பரபரப்பு சம்பவம்…..!!!!!!

சென்னை மணலி ஈவேரா.பெரியார் தெருவில் ரமேஷ் கண்ணா (47) என்பவர் வசித்து வருகிறார். இவர் மணலி மண்டலத்தில் துப்புரவு பணியில் மேற்பார்வையாளராக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகிறார். இவர் மதுரையை சேர்ந்த ரேணுகா (42) என்பவரை கடந்த 20 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். இதில் ரேணுகா தன்வீட்டில் அழகு நிலையம் ஒன்று வைத்து நடத்தி வருகிறார். இதனிடையில் ரமேஷ் கண்ணாவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கணவன்-மனைவி இடையில் தகராறு நிகழ்ந்தது. அப்போது ஏற்பட்ட மனஉளைச்சலில் ரேணுகா தன்வீட்டின் கதவை உள்புறமாக பூட்டினார். பின் அவர் சோபாவில் உட்கார்ந்துகொண்டு 3 சமையல் கியாஸ் சிலிண்டர்களை அருகில் எடுத்து, அதன் வால்வை திறந்துவைத்து தான் தீ வைத்து தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டினார்.  இது குறித்து காவல்துறையினருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
அதன்படி சம்பவ இடத்துக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் முருகானந்தம் தலைமையில் 2 தீயணைப்பு வாகனத்தில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகிலுள்ள வீடுகளில் வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேற்றினர். அந்த பகுதியில் உள்ள வீடுகளில் மின்சாரதுறை வாயிலாக மின்சாரத்தை துண்டித்தனர். அதன்பின் மணலி 21-வது வார்டு அதிமுக கவுன்சிலர் ராஜேஷ்சேகர், செல்போனில் ரேணுகாவிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். எனினும் அதற்கு அவர் செவி சாய்க்கவில்லை. இதனிடையில் ரேணுகாவின் தாய் அமராவதி, தந்தை கந்தசாமி மற்றும் பெண் தோழிகள், உறவினர்கள் அவருடன் பேச முற்பட்டபோது யாராவது வீட்டுக்குள் வந்தால் தீ வைத்து விடுவேன் என்றும் தனது கணவரையும் அவருடன் தொடர்பில் இருக்கும் பெண்ணையும் தன் முன் கொண்டுவந்து நிறுத்துங்கள் என்றும் கூறினார். இல்லையெனில் சிலிண்டரை வெடிக்க செய்வேன் என்று மிரட்டினார். இதன் காரணமாக அப்பகுதியில் கியாஸ்வாடை வீசியதால், மதியம் 12 மணி முதல் இரவு 8 மணிவரை அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட்டு அப்பகுதி மக்கள் வீட்டின் வெளியே காத்திருந்தனர்.
இந்நிலையில் இரவு 8 மணியளவில் மாவட்ட உதவி அலுவலர் மாரியப்பன், மாவட்ட அதிகாரி பாலசுப்பிரமணியம் போன்றோர் நேரடி மேற்பார்வையில் தீயணைப்புபடை வீரர்கள் வீட்டின் கதவை அதிரடியாக உடைத்தனர். அவ்வாறு கதவு உடைக்கப்படும் சத்தம் கேட்டதும் சிலிண்டரை ரேணுகா வேகமாக திறந்தார். அதே சமயம் வீட்டின் பின்பக்க ஜன்னலை உடைத்து அவ்வழியாக ரேணுகா மீது தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இதனிடையில் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்ற தீயணைப்பு படை வீரர்களும் ரேணுகா மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இதன் காரணமாக நிலைக்குலைந்த ரேணுகா மயங்கி விழுந்தார். உடனடியாக உள்ளே சென்ற தீயணைப்புபடையினர் சிலிண்டர் வால்வை அடைத்தனர். அதன்பின் மயங்கி கிடந்த ரேணுகாவை ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து 8 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது.

Categories

Tech |