Categories
உலக செய்திகள்

தந்தை-மகனின் புதையல் வேட்டை…. நேர்மைக்கு கிடைத்த பரிசு… பிரிட்டனில் நெகிழ்ச்சி சம்பவம்…!!!

பிரிட்டனை சேர்ந்த தந்தை மற்றும் மகனுக்கு கிடைத்த புதையல் பெட்டியை உரியவரிடம் ஒப்படைத்ததால், அவர்களுக்கு மிகப்பெரிய பரிசு கிடைத்திருக்கிறது.

பிரிட்டனிலுள்ள Nottinghamshire என்ற பகுதியை சேர்ந்த ஜார்ஜ் என்ற 15 வயது சிறுவன் தன் தந்தையுடன் Lincolnshire என்ற பகுதியிலிருக்கும் Witham என்னும் நதியில் காந்தம் மூலம் புதையல் தேடும் முயற்சியை மேற்கொண்டிருக்கிறார். அப்போது அவர்களுக்கு பழமையான பணப்பெட்டி கிடைத்திருக்கிறது.

 

அவர்கள், பெட்டியை திறந்து பார்த்திருக்கிறார்கள். அதனுள் 2500 ஆஸ்திரேலிய டாலர்கள் இருந்திருக்கிறது. மேலும், அந்த பெட்டியினுள் வங்கி அட்டைகள் உட்பட சில ஆவணங்கள் இருந்துள்ளது. அதன்மூலம் அந்த பெட்டியானது, Lincolnshire என்ற பகுதியில் வசிக்கும் ராப் என்ற நபருடையது என்று தெரியவந்திருக்கிறது.

எனவே, தந்தை மற்றும் மகன் இருவரும் சேர்ந்து அவரை தேடியுள்ளனர். ஒரு வழியாக அவரை கண்டுபிடித்து பணப்பெட்டியை கொடுத்துவிட்டார்கள். ஆச்சரியமடைந்த ராப், சிறுவன் ஜார்ஜ்-க்கு சிறிய தொகையை அன்பளிப்பாக கொடுத்திருக்கிறார். மேலும் ஜார்ஜ் படித்து முடித்தவுடன் தனது நிறுவனத்தில் பணியில் சேர்த்துக் கொள்வதாக கூறியிருக்கிறார்.

இதன் மூலம், தான் நேர்மையாக இருந்தால் மிக பெரிய பலன் கிடைக்கும் என்று ஜார்ஜ் தன் வாழ்க்கையில் கற்றுக் கொள்வார். அவருக்கு பெரிய பாடமாக இது அமையும் என்று ராப் கூறியிருக்கிறார்.

Categories

Tech |