தென்காசி நகரில் தற்போது நடைபெற இருக்கின்ற திமுக அமைப்பு தேர்தலுக்கு விருப்ப மனுக்கள் பெறப்பட்டது.
தென்காசி நகரில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. அதில் வார்டு செயலாளர், வட்ட பிரதிநிதிகள், பொருளாளர், அவைத்தலைவர், நகர செயற்குழு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு நியமனம் செய்ய தற்போது தி.மு.க அமைப்பு தேர்தல் நடைபெற இருக்கின்றது. இந்த தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் புதிய பேருந்து நிலையம் அருகே ஒரு தனியார் விடுதியில் பெறப்பட்டு வருகின்றன.
இதற்கு நியமனம் செய்யப்பட்ட மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் மேகநாதனிடம் மனுக்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன், நகர செயலாளர் சாதிர், நகர் மன்ற துணைத் தலைவர் கே. என். எல் சுப்பையா, மாவட்ட மகளிரணி செயலாளர் முத்துச்செல்வி, ஒன்றிய செயலாளர் சீனி துரை, அழகுசுந்தரம், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சாமிதுரை, கூட்டுறவு சங்க தலைவர் ஷமீம் இப்ராகிம் உட்பட பலர் பங்கேற்றனர்.