நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 13 ஆம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியானது. பூஜா ஹெக்டே நாயகியாக நடித்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லே உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
பீஸ்ட் படம் வெளியாவதற்கு முன் அரபிக்குத்து, ஜாலியோ ஜிம்கானா உள்ளிட்ட 3 பாடல்களும் டீசரும் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களின் மனதை கவர்ந்தன. இந்த நிலையில் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு, அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக வெளியான அறிவிப்பு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக நடிகர் விஜய் 10 ஆண்டுகளுக்கு பின்னர் நேர்காணல் ஒன்றில் பேச இருக்கிறார் என்ற அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு பின் நடிகர் விஜய் சன் டிவியில் பேட்டி அளித்திருந்ததால், இது டிஆர்பி யில் வேற லெவல் சென்றிருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். விஜய் பேட்டி கடந்த 10-ஆம் தேதியும், புஷ்பா படம் 14ஆம் தேதி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் கடந்த வார டிஆர்பி ரேட்டிங் புஷ்பா படம் 10.95 ரேட்டிங் உடன் முதலிடத்திலும், விஜய்யின் பேட்டி 5.68 டிரேட்டிங் உடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது. ஏற்கனவே படம் குறித்து விமர்சனம் எழுந்துள்ள நிலையில், இந்த செய்தி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.