உக்ரைன் ஏவுகணை தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்ட போர் கப்பல் தொடர்பில் ரஷ்யா தற்போது உண்மையை ஒப்புக்கொண்டிருக்கிறது. ரஷ்யாவின் Moskva என்ற போர் கப்பல் கடந்த வாரம் உக்ரைன் துருப்புகளின் ஏவுகணை தாக்குதலுக்கு இலக்கானது. அதில் பயணித்த மொத்த குழுவினரும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் கப்பல் மூழ்கும் முன்னர் அனைத்து வீரர்களையும் காப்பாற்றியதாக ரஷ்ய தரப்பில் கூறப்பட்டு வந்தது. மேலும், 396 வீரர்களை காப்பாற்றியிருப்பதாகவும், வெளியாகியுள்ள மாறுபட்ட கருத்துகளுக்கு தாங்கள் பொறுப்பாக முடியாது எனவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் விளக்கமளித்திருக்கிறது.
அது மட்டுமின்றி, ஒருவர் மட்டுமே மரணமடைந்திருப்பதாகவும், 27 பேர் மாயமாகியுள்ளதாகவும் வெள்ளிக்கிழமை தகவல் வெளியிட்டிருக்கிறது. உக்ரைன் துருப்புகள் தொடுத்த இந்த தாக்குதலானது ரஷ்யாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருந்தது. மேலும், உக்ரைன் துருப்புகளின் தாக்குதலில் கப்பல் மூழ்கவில்லை என தெரிவித்திருந்த ரஷ்யா, வெடிபொருட்கள் திடீரென்று வெடித்ததாலையே கப்பல் சேதமடைந்து கடலில் மூழ்கியுள்ளதாகவும் விளக்கமளித்திருக்கிறது.