Categories
உலக செய்திகள்

உக்ரைன் மீதான படையெடுப்பு வெறும் ஆரம்பம் தான்…. ரஷ்யாவின் பயங்கர திட்டம்…. அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரிக்கை…!!!!!

உக்ரைனின் மற்ற நாடுகளையும் ரஷ்யா கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலன்ஸ்கி  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைன் மீதான படையெடுப்பு வெறும் ஆரம்பம் தான், மற்ற நாடுகளையும் கைப்பற்ற ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக உக்ரேனிய ஜனாதிபதி ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்திருக்கிறார். முன்னதாக, ரஷ்ய மத்திய ராணுவ மாவட்டத்தின் துணை தளபதி Rustam Minnekayev, தெற்கு உக்ரைனை முழுமையாக கட்டுப்பாட்டில் எடுத்தால் Transnistria-வை எளிதாக அணுக முடியும் என தெரிவித்தார்.

Transnistria, மேற்கில் மால்டோவாவில் இருந்து பிரிந்த ரஷ்ய-ஆக்கிரமிப்பு பகுதியாகும். ஒட்டுமொத்த கிழக்கு டான்பாஸ் பிராந்தியத்தையும் கைப்பற்றும் திட்டம் ரஷ்யாவிடம் உள்ளது. அதன் பின் ரஷ்ய படைகள், கிரிமியா தீபகற்பத்தையும், உக்ரைனின் ஒட்டுமொத்த கிழக்கு பிராந்தியத்தையும் (Transnistria வரை) இணைக்கும் என Rustam Minnekayev கூறியிருந்தார்.

இந்தநிலையில், Rustam Minnekayev-வின் கருத்தை குறிப்பிட்ட உக்ரேனிய ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, இதன் மூலம் உக்ரைன் வெறும் ஆரம்ப புள்ளி தான் என்பது தெளிவாகின்றது. Rustam Minnekayev-ன் கருத்தின் மூலமாக  மற்ற நாடுகள் மீதும் படையெடுக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது தெளிவாகிறது.ற்ற நாடுகளும் எங்களுடன் இணைந்த சண்டையிட வேண்டும். அவர்கள் எங்களுக்கு உதவ வேண்டும், ஏனெனில் முதலில் நாங்கள்.எங்களுக்கு அடுத்தது யார் என்பது கேள்விகுரிய என ஜெல்ன்ஸ்கி எச்சரித்துள்ளார்.

Categories

Tech |