உக்ரைன்- ரஷ்யா இடையிலான போர் இன்று 59 நாளாக நீடித்து வரும் சூழ்நிலையில், ரஷ்ய அதிபர் புடினின் நெருங்கிய உள்வட்ட உறுப்பினர்கள் சிலர் உக்ரைன் மீதான தாக்குதல் நடவடிக்கையால் அதிருப்தி அடைந்து இருப்பதாக தெரியவந்துள்ளது. கொரொனா வைரஸ் தொடங்கிய நாளில் இருந்தே பெரும்பாலான சந்திப்புகளை விடியோ அழைப்பு மூலமாக ஜானதிபதி புடின் நடத்த தொடங்கிவிட்டார். இந்த வசதி வாயிலாக அவருடைய கருத்துக்கு எதிராக எவரேனும் மாற்றுக் கருத்து முன்வைத்தால் இணைப்பை துண்டித்துவிட்டு செல்வதற்கு அவருக்கு வசதியாக இருக்கிறதாம். அந்த அடிப்படையில் உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யாவின் மத்தியவங்கி ஆளுநர் எல்விரா நபியுல்லினா பதவிவிலக போவதாக அறிவித்தார்.
இதற்கு அவர் வெளியிட்ட காரணத்தில் ராணுவ நடவடிக்கையால் ரஷ்யாவின் பொருளாதாரம் சீர்குலைந்து அழியப்போகிறது என மட்டும் தெரிவித்திருந்தார். இதில் எல்விரா நபியுல்லினாவின் பதவிவிலகலை எற்க மறுத்த புடின், அவர் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என மட்டும் தெரிவித்துவிட்டு இணைப்பை துண்டித்து விட்டாராம். இதுபோன்று ரஷ்யாவின் ஏராளமான அரசு அதிகாரிகள் மற்றும் ஆலோசகர்கள் உக்ரைன் மீதான தாக்குதல் நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். அத்துடன் இது குறித்து சிலர் வெளியிட்ட கருத்தில், அதிபர் புடின் அவருக்கு எதிரான சிந்தனைகளை சகித்துகொள்ள மறுகிறார் என தெரிவித்துள்ளனர். இதுபோன்ற நடவடிக்கையால் ரஷ்ய அதிபர் நெருங்கிய வட்டாரங்களின் அளவு சுருங்கிகொண்டே வருவதாகவும், பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் நிகோலாய் பட்ருஷேவ் போன்ற சில நபர்களை மட்டுமே அவரது நெருங்கிய கருத்து பரிமாற்றத்திற்கு நம்புவதாகவும் அவரது சுயசரிதை நூலாசிரியர் மார்க் கலியோட்டி தகவல் தெரிவித்துள்ளார்.