Categories
அரசியல்

தகவல் தெரிவித்தால் ரூ.50 லட்சம்… காவல்துறை அதிரடி அறிவிப்பு…!!!!!

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரும் பிரபல தொழிலதிபருமான ராமஜெயம் கொலை வழக்கு பற்றி  தகவல் தெரிவிப்பவருக்கு  ரூ.50 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என சிறப்பு புலனாய்வு குழு எஸ்.பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்திருந்த நிலையில், தற்போது வெகுமதி அறிவிப்பை எஸ்.பி ஜெயக்குமார் வெளியிட்டிருக்கிறார். அந்த அறிவிப்பில், ‘கடந்த 2012ஆம் வருடம் மாதம்-29 ஆம் தேதி தொழிலதிபர் ராமஜெயம் என்பவர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பாக திருச்சி மாநகரம் தில்லைநகர் காலை நிலைய கு.எண். 128/12 0/3 368 மற்றும் 302 இ.த.ச-படி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும் இந்தவழக்கு குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை, சிறப்பு புலனாய்வுக்குழவில் புலன்விசாரணையில் இருந்து வருகிறது. இவ்வழக்கு பொதுமக்களிடமிருந்து அவ்வப்போது தகவல்கள், கடிதங்கள் மற்றும் கைபேசி குறுஞ்செய்தி மூலமாக பெறப்பட்டு வருகின்றது. அவ்வாறு பெறப்பட்ட தகவலை  இக்குழுவானது தீவிர விசாரணை செய்து வருகிறது. எனவே இவ்வழக்கு தொடர்பான தகவல்கள் ஏதேனும் இருந்தால் கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறும், அவ்வாறு தகவல் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும்  எனவும், இவ்வழக்கை துப்பு துலக்க சரியான தகவலை ரூ.50 இலட்சம் பண வெகுமதி வழங்கப்படும் என கூறப்பட்டிருக்கிறது.

அத்துடன் S.ஜெயக்குமார், காவல் கண்காணிப்பாளர் 908061624 மற்றும் R.மதன் காவல் துணைக் கண்காணிப்பாளர் 9498120467. 7094012599(WhatsAp) ஆகியோரையும் தொடர்புகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |